கோதுமை வடாம்
செய்முறை விளக்கம்:
*கோதுமையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
*அதனை அரைத்து மூன்று முறை பால் எடுக்கவும்.
*அரைத்த பாலினை ஒர் இரவு முழுக்க புளிக்க வைத்து மேலோடு இருக்கும் நீரினை ஊற்றி விடவும்
*கெட்டி பாலை அளக்கவும்.1 கப்ப்பிற்கு 3 கப் தண்ணீர் வைக்கவும்.
*குக்கரில் 3 கப் நீரினை ஊற்றிஉப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் கோதுமை பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
*நன்கு வெந்து கண்ணாடி போல் மாவு பதம் வரும் போது பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி மற்றும் சீரகம் சேர்த்து கலக்கவும்.
*கெட்டியாக மாவு வந்து கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்.
*இதில் பாதி கெட்டியான மாவு கூழ் வத்தல் செய்ய தனியாக எடுத்துக் கொண்டேன்.
*பின் மீதி இருக்கும் மாவில் நன்கு கொதித்த நீரை ஊற்றி ஸ்பூனால் எடுத்து ஊற்றும் பதத்தில் கலக்கவும்.
*ஈரமான துணியில் கெட்டிமாவு முறுக்கு அச்சியில் பிழிந்தும்,நீர்க்க மாவை ஸ்பூனால் ஊற்றியும் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*பின் மறுநாள் துணியின் மறுபக்கத்தில் நீரை தெளித்து வற்றலை எடுத்து 2 -3 நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்கவும்.