பீர்க்கங்காய்த் தோல் துவையல் | ridge gourd peel thogayal

தேவையான பொருட்கள்: 

பொடியாக வெட்டிய பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 4

புளி - 1 நெல்லிக்காயளவு

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

கொள்ளு - 1 டேபிள்ஸ்பூன்

எள் - 1/2 டீஸ்பூன்

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை விளக்கம்:

*எள், உளுத்தம்பருப்பு மற்றும் கொள்ளு வெரும் கடாயில் வறுக்கவும்.

*எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய்த்துறுவல் வதக்கவும்.

*சிறிது எண்ணெய் விட்டு பீர்க்கங்காய்த்தோலை வதக்கவும்.

*ஆறியதும் புளி மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்

Related Videos