ஆந்திரா சாம்பார் | Andhra Sambar
தேவையான பொருட்கள்:
து.பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் -1/2 கப்
முருங்கைக்காய் -1
கேரட் -2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
கசகசா - 1 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் -1
செய்முறை விளக்கம்:
*குக்கரில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.வெந்ததும் நறுக்கிய காய்கள் சேர்த்து 2 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி அரைத்த விழுது, சாம்பார் பொடி மற்றும் புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் வேகவைத்த காய் பருப்பு கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்