வேகன் சாக்லேட் மஃபின்
தேவையான பொருட்கள்:
Self Raising Flour -3/4 கப்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அவனை 180°C முற்சூடு செய்யவும்.
*மாவுடன் , பேக்கிங் சோடா மற்றும் கோகோ பவுடர் கலந்து சலிக்கவும்.
*ஒரு பவுலில் தண்ணீர், சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் கோகோ கலவையை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கலக்கவும்.
*கடைசியாக வினிகர் கலந்து மஃபின் கப்களில் 3/4 பாகம் வரை ஊற்றவும்.
*காலியான மஃபின் இடங்களில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
பின் குறிப்பு:
*முட்டையில் செய்ததை போலவே இந்த கேக் நன்கு உப்பி வரும்.
*Self Raising Flour = 1 கப் மைதா , 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு