இஞ்சி பூண்டு விழுது &புளி பேஸ்ட் செய்வதெப்படி?
இஞ்சி பூண்டு விழுது
தேவையான பொருட்கள்:
இஞ்சி பூண்டு - தலா 100 கிராம்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*இஞ்சி பூண்டை நறுக்கி உப்பு+எண்ணெய் சேர்த்து மைய அரைக்கவும்.
பின் குறிப்பு:
*தண்ணீர் சேர்த்து அரைக்ககூடாது,சீக்கிரம் கெட்டுவிடும்.கலரும் மாறிவிடும்.ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
*எடுக்கும் போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.
புளிபேஸ்ட்
தேவையான பொருட்கள்:
புளி - 500 கிராம்
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 6 கப்
செய்முறை விளக்கம்:
*புளியை 6கப் நீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வைக்கவும்.
*ஆறியதும் நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
*பின் கடாயில் கரைத்த புளி+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து ஆறியதும் பாட்டிலில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
பின் குறிப்பு:
*எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.
*1 டேபிள்ஸ்பூன் புளிபேஸ்ட்க்கு தேவையானளவு நீர் சேர்த்து கரைத்து பயன்படுத்தவும்.