செக்கர்போர்ட் கேக்
என்னிடம் சாக்லேட் இல்லாததால் கோகோ பவுடரிலேயே கேக்+ப்ராஸ்டிங் செய்தேன்.
தேவையான பொருட்கள்:
மைதா - 2 1/4 கப்
சர்க்கரை -2 கப்
உப்பு -1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை -3
வெனிலா எசன்ஸ் -2 டீஸ்பூன்
கோகோ பவுடர் -1/2 கப்
பால் -1/2 கப்
ப்ராஸ்டிங் செய்ய:
வெண்ணெய் - 250 கிராம்
சர்க்கரை - 4 கப் நைசாக பொடித்தது
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் -1 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*முட்டை மற்றும் வெண்ணெய் இவ்விரண்டும் அறை வெப்பநிலையில் இருக்கவேண்டும்.
*மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் 3 முறை சலிக்கவும்.
*முட்டை மஞ்சள் கரு மற்றும் வெள்ளை தனியாக பிரித்தெடுத்தெடுத்து,வெள்ளை கருவை நன்கு நுரைவரும் வரை பீட் செய்து வைக்கவும்.
*வெண்ணெய், சர்க்கரை மற்றும் மஞ்சள் கரு சேர்த்து நன்கு பீட் செய்ததும் அதனுடன் வெள்ளை கரு மற்றும் பால் செர்த்து கலக்கவும்.
*கொஞ்ச கொஞ்சமாக மைதா கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
*நன்கு கலகியதும் 2 சம பங்காக பிரித்து ஒன்றில் வெனிலா எசன்ஸும்,இன்னொன்றில் கோகோ பவுடரையும் கலந்து வைக்கவும்.
*கேக் செய்யும் பானில் வெண்ணெய் தடவி மைதாவை தூவி விடவும்.அதிகபடியான மாவை கீழே கொட்டவும்.அவனை 180 முற்சூடு 10நிமிடம் முற்சூடு செய்யவும்.
*2 பைப்பிங் பேக்கில் வெனிலா கலவை மற்றும் கோகோ கலவையைநிரப்பவும்.
*முதலில் நடுவில் வெனிலா கலவையை 3முறை சுற்றியும்,அடுத்து சாக்லேட் கலவையை 4 முறை சுற்றியும்,அடுத்து வெனிலா கலவையை முழுவதுமாக சுற்றி எடுக்கவும்.
*இதனை 180°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*இந்த அதிகப்படியான வெனிலா கலவை உள்ள கேக்கை 2 முறை பேக் செய்து எடுத்தேன்.
*அடுத்து சாக்லேட் கலவையைநடுவிலும் ஓரத்திலும் மேற்சொன்ன சுற்று அளவில் சுற்றி ,நடுவில் வெனிலா கலவையை சுற்றி எடுத்து பேக் செய்யவும்..
ப்ராஸ்டிங் செய்ய:
*வெண்ணெயும்,சர்க்கரையும் நன்கு நுரை வரும்வரை பீட் செய்யவும்.
*அதனுடன் எசன்ஸ், பால் மற்றும் கோகோ பவுடரை கலக்கவும்.
கேக் அடுக்கும் முறை
*முதலில் அதிகப்படியான வெனிலா கலவை உள்ள கேக்கை வைத்து அதன்மேல் ப்ராஸ்டிங்கை தடவி அதன்மேல் அதிகப்படியான சாக்லேட் கேக்கை வைத்து ப்ராஸ்டிங்கை தடவி அதன்மேல் வெனிலா கேக் வைத்து மேற்புறத்திலும் ஓரங்களிலும் ப்ராஸ்டிங்கை தடவி விரும்பிய வடிவில் டெகரேட் செய்யவும்.
*கேக் கட் செய்த பின் எடுத்தது...