வெண்டைக்காய் பொரியல் | Lady Finger Poriyal

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -1/4 கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது

இஞ்சி பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

பொடித்த வேர்க்கடலை -1/4 கப்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1/2 டீஸ்பூன்

காய்ந்தமிளகாய் -1

கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை விளக்கம்:

*வெண்டைக்காயை கழுவி துடைத்து  சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் மிளகாய்த்தூள் , வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.இடையே வெண்டைக்காயின் கொழகொழப்பு போக 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.

*வெந்ததும்  தேங்காய்த்துறுவல் மற்றும் வேர்க்கடலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

Related Videos