தரைபசலைக் கீரை கடையல் | Tharai Pasalai Keerai Kadaiyal

பசலைக்கீரையில் கொடி பசலை மற்றும் தரைபசலை என இருவகைகள் உண்டு.தரை பசலைக்கீரையை கடையல் மட்டுமே செய்ய முடியும்.

இதனை தனியாகவோ அல்லது மற்ற அனைத்துவகை கீரைகளுடன் கலந்து சேர்த்து கடையலாம்.

தரைபசலையுடன் அனைத்துகீரையும் சேர்ந்து இருப்பதால் இதனை கலவை கீரை என்றும் சொல்வார்கள்.

இந்த ரெசிபியில் தரைபசலையுடன் அனைத்து கீரையும் கலந்து சேர்த்து கலைந்துருக்கேன்.

தேவையான பொருட்கள்:

கலவை கீரை - 4 கப்
தக்காளி -1 பெரியது
பூண்டுப்பல் - 4
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை விளக்கம்:

*கலவை கீரையை சுத்தம் செய்து நன்கு அலசிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் கீரை, தக்காளி, பூண்டு மற்றும் பச்சைமிளகாய் என தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.


*கீரை வெந்ததும் கீரை கடையும் சட்டியிலோ அல்லது மிக்ஸியிலோ உப்பு சேர்த்து கடையவும்.

*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையில் கலந்து மறுபடியும் நன்றாக கடைந்து பரிமாறவும்.

*காரகுழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Related Videos