கொங்கு ஸ்டைல் வெஜ் தாளி
அரிசியும் பருப்பு சாதம்
வெண்டைக்காய் காரகுழம்பு
கொள்ளு ரசம்
கேரட் பீன்ஸ் பொரியல்
காரட் அல்வா
வாழைக்காய் சிப்ஸ் மற்றும்
மெது வடை
வெண்டைக்காய் காரகுழம்பு - வத்தல் போட்டு தாளிப்பதற்கு பதில் வெங்காயம் போட்டு வதக்கும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் குழம்பு ரெடி!!
அனைத்து சமையல்களையும் செய்து முடிக்க 2 மணிநேரமே ஆனது. வேலையை இன்னும் சுலபமாக முடிக்க கேரட் அல்வா மற்றும் சிப்ஸ் முதல்நாளே செய்துவைக்கலாம்.
அரிசியும் பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
பொன்னி அரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
நிளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 1
பூண்டுப்பல் -8
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1/2 டீஸ்பூன்
நெய் -1/2 டீஸ்பூன்
நீர் - 1 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*அரிசி மற்றும் பருப்பை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டுப்பல், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*பின் உப்பு, சாம்பார்பொடி, மஞ்சள்தூள் மற்றும் 1 1/4 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*இந்த சாதம் குழையாமல் உதிரியாக இருக்கவேண்டும்.