கோதுமை ப்ரெட்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மைதாமாவு - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
 
செய்முறை விளக்கம்:

*கோதுமை மாவில் உப்பு மற்றும் சர்க்கரையைக் கலக்கவும்.சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்டைக் கலக்கி 5 நிமிடம் வைத்தால் பொங்கி வரும்.

*மாவில் பால் மற்றும் ஈஸ்ட் நீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.அதை ஒரு ஈரமான மெல்லியதுணியில் 2 மணிநேரம் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து 2 மடங்காக மாவு உப்பி இருக்கும்.மறுபடியும் நன்கு மிருதுவாக பிசைந்து ஈரத்துணியில் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

* 1 மணிநேரம் கழித்து அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

*கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மாவை வைத்து கையால் வட்டமாக தட்டி மைதாவை மேலே தூவி 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

Related Videos