கோவைக்காய் வறுவல் | Ivy Gourd(Tindora) Poriyal

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - 1/4 கிலோ

சீரகம் -1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

உப்பு+எண்ணெய் =  தேவைக்கு

பொடிக்க:

முந்திரி -2 டீஸ்பூன்

கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

பூண்டுப்பல் -1

கரம் மசாலா -1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நான் எண்ணெயில் பொரிக்காமல் நான் ஸ்டிக் கடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து செய்துள்ளேன்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளில் உப்பு சேர்த்து  நைசாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து  பொடித்த பொடி, பொரித்த கோவைக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்

Related Videos