சிறு கீரை பருப்பு கடையல் | Siru Keerai(Tropical Amaranth Leaves) Paruppu Kadaiyal


சிறு கீரையின் பயன்கள்
*மஞ்சள் மற்றும் சிறுகீரையை அரைத்து பற்று போடுவதால் முகப்பருவின்புள்ளிகள் மறையும்.

*சிறுநீரககோளாறு,கண்பார்வை குறைவாக  உள்ளவர்கள் இந்த கீரை சாப்பிடுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதில் பொரியல்,கூட்டு ,பருப்பு சேர்த்து கடையல் மற்றும் புளி சேர்த்து கடையல் செய்யலாம்.

இப்போழுது இதில் பருப்பு சேர்த்து கடையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் -1 சிறியது
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் -2
பாசிப்பருப்பு -1/3 கப்
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-1

செய்முறை விளக்கம்:

*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி வைக்கவும்.

*பாத்திரத்தில் பருப்பு, நறுக்கிய வெங்காயம், பூண்டுமற்றும் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.

*பாதியளவு பருப்பு வெந்ததும் கீரையை சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் கீரைகடையும் சட்டியில் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து மத்தினால் மைய கடையவும்.
*இந்த கீரையில் பருப்பு எவ்வளவு சேர்க்கிறோமோ அந்தளவு ருசியாக இருக்கும

Related Videos