கார்லிக் ரோல்ஸ்

தேவையான பொருட்கள்:

ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
எள் - மேலே தூவ
பால் - 1/4 கப்

ஸ்டப் செய்ய:

வெண்ணெய் - 50 கிராம்(அறை வெப்பநிலை)
உப்பு - 1 டீஸ்பூன்
துருவிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*1 கப் மிதமான வெந்நீரில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.

*ஒரு பவுலில் ஈஸ்ட் கலவை, உப்பு மற்றும் மாவு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.பின் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

* பொங்கிய மாவை மிருதுவாக பிசையவும்.

*ஸ்டப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*மாவை இரண்டு பெரிய உருண்டையாக எடுக்கவும்.ஒரு உருண்டையை சதுரமாக உருட்டவும்.

*அதன்மேல் ஸ்டப்பிங் சமமாக தடவி பாய் போல சுருட்டவும்.

*முதலில் 2ஆக வெட்டி,பின் வெட்டியவைகளை மீண்டும் 2ஆக வெட்டவும்.இதேபோல் அடுத்த உருண்டையையும் செய்துக் கொள்ளவும்.

*பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி வெட்டியவைகளை ஒன்றோடு ஒண்ரு ஒட்டுமாறு வைத்து அதன்மேல் பால்(அ)முட்டை தடவி எள் தூவி விடவும்.

*பின் மீண்டும் இந்த உருண்டைகளை 1/2 மணிநேரம் வைத்திருந்து 200°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*ஸ்டப்பிங் மீதமானால் ப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைத்திருந்து உபயோக்கிக்கலாம்.

*ப்ரெட் டோஸ்ட் செய்யும் போது தடவி டோஸ்ட் செய்தால் அருமையாக இருக்கும்.

Related Videos