மாம்பழ ஸ்ரீகண்ட்
தேவையான பொருட்கள்:
புளிப்பில்லாத தயிர் - 250 கிராம்
மாம்பழ கூழ் - 1/2 கப்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க
செய்முறை விளக்கம்:
*தயிரை முதல் நாள் இரவே மெல்லியதுணியில் கட்டி தொங்கவிடவும்.
*மறுநாள் கெட்டிதயிர் கிடைக்கும்.அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கி பிஸ்தா பருப்பு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
* சப்பாத்தி பூரியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
பின் குறிப்பு:
*இதில் நான் ரெடிமேட் மாம்பழகூழ் சேர்த்துள்ளேன்.ப்ரெஷ் மாம்பழ கூழ் சேர்த்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.