குஜராத்தி தாளி

நான் செய்திருப்பது

சாதம்

புல்கா/ரொட்டி

குஜராத்தி காதி

படாடா நு சாக்(உருளை வறுவல்)

திண்டோரா நு சாக் (கோவைக்காய் வறுவல்)

காந்த்வி

மசாலா சாஸ்

மைக்ரோவேவ் கேசர் பேடா

 Recipe Source

குஜராத்தி காதி

தேவையான பொருட்கள்:

தயிர்- 3/4 கப்

கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது

இஞ்சி விழுது -1/4 டீஸ்பூன்

சர்க்கரை -1 1/2 டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

நீர் -1 1/2 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -தேவைக்கு

 தாளிக்க:

நெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1/4 டீஸ்பூன்

சீரகம்- 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 1

கிராம்பு- 2

பட்டை -சிறுதுண்டு

கறிவேப்பிலை -5 இலைகள்

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் கொத்தமல்லிதழை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து விஸ்க் மூலம் நன்கு கலக்கவும்.

 *அதனை அப்படியே அடுப்பில் வைத்து சிறுதீயில் இடைவிடாமல் கலக்கி கொண்டே 5 6 நிமிடங்கள் வரை கலக்கவும்.

 *பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

 *கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

பின் குறிப்பு :

*விரும்பினால் மஞ்சள்தூள் சேர்க்கலாம்.

*சர்க்கரை சேர்ப்பது சுவை மேலும் நன்றாக இருக்கும்,அதனால் கண்டிப்பாக சேர்க்கவும்.

 படாடா நு சாக் (உருளை வறுவல்)

 தேவையான பொருட்கள்:

வேகவைத்த உருளை -2 பெரியது

வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்

எள் -1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்

மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்

கடுகு -1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய்= தேவைக்கு

 செய்முறை விளக்கம்:

*உருளையை துண்டுகளாக்கவும்.

 *கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு+ பெருங்காயத்தூள்+வரமிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+எள் சேர்த்து வதங்கியதும் துண்டுகளாகிய உருளை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

 திண்டோரா நு சாக் (கோவைக்காய் வறுவல்)

 தேவையான பொருட்கள்:

கோவைக்காய் -1/4 கிலோ நீளவாக்கில் நறுக்கியது

கடுகு- 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்

வரமிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

சீரகபொடி- 1/2 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய்=தேவைக்கு

 செய்முறை விளக்கம்:

 *கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து நறுக்கிய கோவைக்காய் சேர்த்து  வதக்கவும்.

 *பின் அனைத்து பொடி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

 மசாலா சாஸ்

 தேவையான பொருட்கள்:

தயிர் -1/2 கப்

நீர் -1 கப்

உப்பு -தேவைக்கு

க்ரீம்- 1 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய்- 1

நறுக்கிய இஞ்சி- 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

 *அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அடித்து பரிமாறவும்.

Related Videos