கிறிஸ்துமஸ் யூல் லாக் கேக்

தேவையான பொருட்கள்:

ஸ்பாஞ்ச் கேக் செய்ய

முட்டை -6 அறை வெப்ப நிலை

சர்க்கரை -3/4 கப்

கோகோ பவுடர் - 1/2 கப்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஐசிங் சுகர் -5 டீஸ்பூன்  அலங்கரிக்க

ஐசிங் செய்ய:

Bittersweet Chocolate (Chopped) - 1 கப்

வெண்ணெய் -  200 கிராம்

ஐசிங் சுகர் - 1 1/3 கப்

வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அவனை 180°C 10 நிமிடங்கள்  முற்சூடு செய்யவும்.

*முட்டை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவினை தனிதனியாக பிரிக்கவும்.

*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து வெளிர் மஞ்சள் கலர் வரும் வரை நன்கு கலக்கவும்.

*அதில் கோகோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

*மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை கருவினை நன்கு நுரைபோல் வரும் வரை கலக்கவும்.

*இதனை  மஞ்சள் கருவுடன் மிருதுவாக கலக்கவும்.

*பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி Parchment Paper போட்டு அதன் மீதும் வெண்ணெய் தடவி  முட்டை கலவையினை ஊற்றி 10-15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

*அவனிலிருந்து கேக்கை எடுத்து அதன்மீது ஐசிங் சுகரை தூவி விடவும்.ஒருதுணியை நீரில் நனைத்து நன்கு பிழிந்து அதன்மீது ஸ்பாஞ் கேக்கினை கவித்து  Parchment Paper- எடுக்கவும்.

*இப்போழுது  அதன்மீது மறுபடியும் ஐசிங் சுகரை தூவி துணியோடு சேர்த்து கேக்கினை மெதுவாக சுருட்டி 10 நிமிடங்கள் வைத்திருந்து விரிக்கவும்.

*இதனிடையே  சாக்லேட்டினை டபுள் பாய்லரில் உருக்கி ஆறவிடவும்.

*சர்க்கரை +வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி ஆறவைத்த சாக்லேட் கலவை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கினால் ஐசிங் ரெடி!!

*இந்த ஐசிங்கை கேக்கின் மீது தடவி மெதுவாக சுருட்டவும்.

*இப்பொழுது கேக்கின் ஒரு முனையினை சிறிதளவு வெட்டி  எடுக்கவும்.வெட்டிய சிறுதுண்டு கேக்கினை நீளமாக உள்ள கேக்கின் மீது வைத்து அதன்மீது மீதமுள்ள ஐசிங்கை தடவி விடவும்.

*முள்கரண்டியால் ஐசிங் மீது நீளமாக இழுத்து அதன் மீது ஐசிங் சுகர் தூவி விடவும்.

பின் குறிப்பு:

*முட்டையினை ப்ரிட்ஜிலிருந்து எடுத்தவுடன் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவினை பிரித்தால் ஈசியாக வரும்.

*இந்த கேக்கினை 1 வரத்திற்கு முன்பாக செய்து காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.

*ப்ரீசரில் 3 மாதம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*கேக்கினை அவனிலிருந்து எடுத்து சூடாக இருக்கும்போதே சுருட்டினால் கிழியாது.அப்படியே கிழிந்தாலும் அதன் மீது ஐசிங் தடவுவதால் கவலை இல்லை.

Related Videos