முட்டையில்லாத ப்ளாக் ஃபாரஸட் கேக் | eggless black forest cake
தேவையான பொருட்கள்:
முட்டையில்லா சாக்லேட் கேக்-1
ஹெவி க்ரீம்- 200 மிலி
ஐசிங் சுகர்- 4 1/2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய செர்ரி பழ துண்டுகள் -1/4 கப்
சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
நீர் -1/4 கப்
துருவிய சாக்லேட் -அலங்கரிக்க
செய்முறை விளக்கம்:
*1/4 கப் நீரில் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை சூடு செய்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும்.
*விப்பிங் க்ரீமை பவுலில் ஊற்றி ,சிறிது சிறிதாக ஐசிங் சர்க்கரை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
*கேக் போர்டில் சிறிது விப்பிங் க்ரீம் வைத்து அதன் மேல் கேக் வைக்கவும்.
*ப்ரெஷ்ஷால் சர்க்கரை பாகினை கேக் மீது தடவும்.
*அதன் மீது விப்பிங் க்ரீம் வைத்து நறுக்கிய செர்ரி துண்டுகளை வைக்கவும்.
*இதே போல் இன்னொரு லேயர் கேக் வைத்து செய்யவும்.
*கடைசியாக கேக் மீது ப்ரெஷ் க்ரீம் தடவி விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்கவும்.
*அதன் மீது செர்ரி பழத்துண்டுகள் மற்றும் துருவிய சாக்லேட் சேர்த்து அலங்கரிக்கவும்.