பேக்ட் சாக்லேட் க்ரீம்

இந்த மாதம் Home Bakers Challenge-ல் ப்ரியா சுரேஷ் ப்ரெஞ்ச் பேக்கிங் ரெசிபிகளை கொடுத்திருக்காங்க.அதில் நான் பேக்ட் சாக்லேட் க்ரீம் செய்தேன்.இங்கு மிகவும் பிரபலமான டெசர்ட் இது.

Recipe Source : Cuisine- Facile

பரிமாறும் அளவு - 3 நபர்கள்

தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்

பேக்கிங் நேரம் - 30 நிமிடங்கள்

ப்ரிட்ஜில் குளிரவைக்கும் நேரம் - 120 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்: 

முட்டை மஞ்சள்கரு - 2

டார்க் சாக்லேட் - 50 கிராம்

ப்ரெஷ் க்ரீம் -1/2 கப்

பால் -1/4 கப்
ஐசிங் சுகர் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் பால் மற்றும் ப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடு செய்யவும்.கொதிக்கவிடவேண்டாம்.

*மற்றொரு பவுலில் மஞ்சள் கரு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

*சாக்லேட்டை துண்டுகளாகிஅதில்  சூடான பாலை ஊற்றி நன்கு கரையும் வரை கலக்கவும்.

*ஆறியதும் மஞ்சள் கருவில் ஊற்றி கலக்கி வடிகட்டவும்.

*அதனை பேக்கிங் செய்யும் சிறிய பவுல் அல்லது Ramekins ஊற்றி பேக்கிங்  டிரேயில் வைக்கவும்.அதில் 2 கப் கொதிக்கும் நீரை ஊற்றவும்.

*அவனை 170°C  சூடு செய்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

*ஆறியதும் ப்ரிட்ஜில் 2 மணிநேரம் குளிரவைத்து பரிமாறவும்.

பின் குறிப்பு:

*பரிமாறும் போது மேலே விப்பிங் க்ரீம் வைத்து பரிமாறலாம்.

*பேக் செய்து எடுக்கும் போது க்ரீம் வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் கெட்டியாகிவிடும்.எனவே 30 நிமிடங்கள் வரை பேக் செய்தால் போதுமானது.

Related Videos