சுவையான மினி ஜாங்கிரி செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
வெள்ளை முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க
பாகு செய்ய:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எலுமிச்சை சாறு - 1/2 டேபிஸ்பூன்
நாட்டு பன்னீர் ரோஜா குல்கந்த் செய்முறை??
சுவையான மினி ஜாங்கிரி செய்முறை:
*உளுந்தை 1 மணி நேரம் ஊறவைத்து நன்கு வெண்ணெய் போல் சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
*அதனுடன் அரிசிமாவுமற்றும் சிறிது நீரில் புட்கலர் கலக்கவும்.மாவு ஒட்டையில் விழும் பதமாக இருக்க வேண்டும்.
*ஒரு ஜிப்லாக் கவரில், ஒரு கம்பி எடுத்து லேசாக சூடு செய்து ஒட்டையை மெலிதாக போடவும்.
*ஒட்டை போட்ட கவரில் மாவை நிரப்பி படத்தில் உள்ளவாறு பிழியவும்.முதலில் 2 வட்டங்கள் போட்டு அதன்மேல் குட்டி குட்டி வளையங்கள் போல் பிழியவும்.2,3 முறை போட்டவுடன் அழகாக வரும்.
*எண்ணெய் காயவைத்து நேரடியாக மாவை பிழியவும்.ஒரு புறம் வெந்ததும்,மறுபுறம் திருப்பி வேகவிடவும்.ரொம்பவும் முறுகலாக எடுக்ககூடாது.
*இன்னொரு அடுப்பில்,பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*பொரித்த ஜாங்கிரிகளை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.
பின் குறிப்பு:
*ஒட்டையை மிக மெலிதாக போடவும்.மாவு சரியாக பிழிய வரவில்லையெனில் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கவும்.
*சர்க்கரை பாகு தண்ணீயாக இல்லாமலும்,கெட்டியாக இல்லாமலும் இருக்கனும்.
*பொரித்த ஜாங்கிரியும்,சர்க்கரை பாகும் சூடாக இருக்க வேண்டும்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Jangiri Receipe in Tamil | Sweet & Taste Jangiri Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil