நாணிஸ்ஸா
தேவையான பொருட்கள்:
நாண்- 1
பனீர் துண்டுகள் - 10
பிஸ்ஸா சாஸ்- தேவைக்கு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
துருவிய சீஸ் - தேவைக்கு
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
கெட்டித்தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*ஒரு பவுலில் தயிர், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா இவற்றை கலந்து பனீர் துண்டுகளை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைத்து தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்தெடுக்கவும்.
*அவனை 220 முற்சூடு செய்து நாணை பேக்கிங் டிரேயில் வைத்து 5 வைத்து எடுக்கவும்.
*பின் அதன்மீது பிஸ்ஸா சாஸ் தடவி வறுத்த பனீர் துண்டுகள், வெங்காயம், கொத்தமல்லித்தழை, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் சீஸ் இவற்றை தூவி விடவும்.
*அதன்மீது நெய் பரவலாக ஊற்றி மீண்டும் 5 - 6 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
பின் குறிப்பு: