பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ் | Dates & Chocolate Brownies
தேவையான பொருட்கள்:
மைதா -1 கப்
பேரீச்சம்பழ விழுது -1/2 கப்
சர்க்கரை / தேன் - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் எண்ணெய் -1/2 கப்
முட்டை -2
பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன்
கோகோ பவுடர் -2 டேபிள்ஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் -1/4 கப்
செய்முறை விளக்கம்:
*சதுர வடிவ பேக்கிங் பானில் எண்ணெய் தடவி வைக்கவும்.அவனை 350 /180 முற்சூடு செய்யவும்.
*மைதா, கோகோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் இவற்றினை ஒன்றாக கலந்து 2 முறை சலிக்கவும்.
*பவுலில் பேரீச்சம்பழ விழுது+எண்ணெய் மற்றும் சர்க்கரை / தேன் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
*சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால் சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும். *சர்க்கரை கரைந்ததும் ஒவ்வொரு முட்டையாக ஊற்றி மிருதுவாக கலக்கவும்.
*இப்போழுது மைதா கலவையினை கொஞ்ச கொஞ்சமாக சேர்க்கவும்.கலவையினை மிருதுவாக கலந்து விடவும்.
*சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து சதுர வடிவ டிரேயில் ஊற்றி 20-25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.