சாக்லேட் கேக் | Chocolate cake

தேவையான பொருட்கள்:

சாக்லேட் கேக் -2

Chocolate Ganache செய்ய:

டார்க் சாக்லேட்  - 250 கிராம்
வெண்ணெய் - 25 கிராம்
ப்ரெஷ் க்ரீம் - 1/3 கப்

சாக்லேட் ப்ராஸ்டிங் செய்ய:

விப்பிங் க்ரீம் - 1 கப்
Chocolate Ganache

பட்டர் க்ரீம் ப்ராஸ்டிங் செய்ய:

உப்பில்லாத வெண்ணெய் -50 கிராம்
ஐசிங் சர்க்கரை -100 கிராம்
பால் -சிறிதளவு

செய்முறை விளக்கம்:

சாக்லேட் கேக்கினை ரெடிமேட் கேக் மிக்ஸில் முட்டை சேர்த்து செய்திருக்கேன்.பாக்கெட்டில் கொடுத்துள்ளபடி கேக்கினை செய்துக் கொள்ளவும்.

Chocolate Ganache செய்ய டார்க் சாக்லேட்டினை நறுக்கவும்.

*ஒரு பவுலில் நறுக்கிய சாக்லேட் , வெண்ணெய் மற்றும் ப்ரெஷ் க்ரீம் சேர்த்து டபுள் பாய்லரில் கரைய விடவும்.கரைந்ததும் ஆறவைக்கவும்.

*விப்பிங் க்ரீமை நன்கு அடிக்கவும்.

*அதனை சாக்லேட் கலவையில் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.
*கேக்கின் மேல் பாகத்தை மேலோடு வெட்டி எடுக்கவும்.

*கார்ட்போர்ட்டில் அலுமினியம் பேப்பரஐ 2 இஞ்சி கூடுதலாக வெடி சுற்றிலும் ஒட்டி விடவும்.

*கார்ட்போர்ட் மேலே விப்பிங் க்ரீமை தடவி கேக்கின் ஒரு லேயரை வைத்து அதன் மேல் சாக்லேட் ப்ராஸ்டிங்கை தடவவும்.

*கார்ட்போர்டில் கேகினை வைத்த பிறகு சுற்றிலும் பட்டர் பேப்பரை வைக்கவும்.இப்படி செய்வது ப்ராஸ்டிங் தடவும் போது கார்ட்போர்டில் படாமல் இருக்கும்.

*ப்ராஸ்டிங் செய்து முடித்ததும் எடுத்துவிடலாம்.

*இதே போல் இன்னோரு லேயர் கேக்கினை செய்து சுற்றிலும் ப்ராஸ்டிங்கை தடவவும்.

*ப்ராஸ்டிங் செய்து முடித்ததும் சுற்றிலும் விரும்பிய டிசைனை செய்யலாம்.

*இங்கு நான் சாதரண டிசைன் டிப்பின் மூலம் Basket Weave Decoration செய்து இருக்கேன்.

*கேக்கின் லேலே பல் குத்தும் குச்சியில் நாம் விரும்பும் எழுத்தினை எழுதவும்.
பட்டர் க்ரீம் ப்ராஸ்டிங் செய்ய

*பட்டரை அறை வெப்பநிலையில் வைத்திருக்கவும்.
*பின் ப்ளெண்டரில் நன்கு அடிக்கவும்.லைட் மஞ்சள் கலர் வரும் வரை ஸ்லோ பீடில் அடிக்கவும்.

*2 டேபிள்ஸ்பூன் ஐசிங் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.அனைத்து சர்க்கரையும் இதே போல் சேர்த்த பின்னர் கலவை உதிரியாக முட்டை பொடிமாஸ் போல வரும்.

*அப்போழுது 1 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து கலக்கவும்.இல்லையெனில் 1 டீஸ்பூன் பால் சேர்த்துகலக்கவும்.

*விரும்பினால் கலர் சேர்க்கலாம்.பட்டர் க்ரீம் பராஸ்டிபிங் ரெடி!!
*ஜிப்லாக் கவரில் க்ரீமை நிரப்பி,அடியில் கத்திரிக்கோலால் சிறிய அளவில் வெட்டி எடுக்கவும்.

*நாம் விரும்பியவாறு கேக்கில் எழுதவும்.

*பின் சுற்றிலும் விரும்பிய டிப்களில் கேக்கினை சுற்றி அலங்கரிக்கவும்.

பின் குறிப்பு:

*பட்டர் க்ரீம் ப்ராஸ்டிங் செய்யும் போது பட்டரை ஒருபோதும் மைக்ரோவேவில் உருக்ககூடாது.

*செய்யும் நேரத்திற்கு முன்பு பட்டரை எடுத்து பொடியாக வெட்டி 1‍ அல்லது 2 மணிநேரத்திற்கு முன் வெளியே எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.

*எப்போழுதும் ஐசிங் சர்க்கரை சேர்க்கும் போது சலித்து விட்டு பயன்படுத்தவும்.

Related Videos