கை முறுக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1/2 கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை விளக்கம்:
*அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*துணியில் ஈரம் போக உலர்த்தி,மிக்ஸியில் மாவாக நைசாக அரைக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும்
*சிறு உருண்டை அளவில் மாவை எடுத்து பேப்பரில், பாட்டில் மேல்மூடி வைத்து மாவை முறுக்கி வட்டமாக சுற்றி விடவும்
*சிறிது நேரம் உலரவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
பின் குறிப்பு:
*இந்த முறுக்கிற்கு அரிசிமாவை ஈரபதமாகதான் பயன்படுத்த வேண்டும்.மாவை வறுக்ககூடாது.
*1/2 கப் அரிசியில் 1 கப் அளவிற்க்கு அரிசிமாவு வரும்.
*நெய் பயன்படுத்தினால் முறுக்கு சிவந்துவிடும்,அதனால் முறுக்கிற்கு எப்போழுதும் வெண்ணெயை பயன்படுத்தவும்.
*தேங்காய் எண்ணெய் சிறிது சேர்ப்பதால் நன்கு வாசனையுடன் இருக்கும்.
*மாவை சுற்றும்போது கையில் எண்ணெய் தடவி சுற்றினால் ஈசியாக சுற்ற வரும்.
*நான் ரெடிமேட் உளுத்தமாவு பயன்படுத்தியிருக்கிறேன்.உளுத்தமாவு இல்லையெனில் உளுந்தை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுத்து நைசாக பொடிக்கவும்