காரா பூந்தி

தேவையான பொருட்கள்:

கடலைமாவு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை,முந்திரி, வேர்க்கடலை- சிறிதளவு

நசுக்கிய பூண்டுப்பல் ‍-  2

உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் சோடா மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் விட்டு கரைக்கவும்.

*பூந்தியாக விழும் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்

*எண்ணெய் காயவைத்து பூந்தி அல்லது கண்கரண்டியில் மாவை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.

*ஒவ்வொரு முறையும் பூந்தி ஊற்றியதும் பேப்பரால் கண்கரண்டியை நன்கு துடைக்கவும்.

*கறிவேப்பிலை, வேர்க்க‌டலை, முந்திரி மற்றும் பூண்டுப்பல் இவற்றை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து பூந்தியில் கலந்து பரிமாறவும். 

பின் குறிப்பு:

* பூந்தியை தேய்ப்பதற்க்கு முன் சிறிய கரண்டியின் பின்புறத்தை மாவில் நனைத்து எண்ணெயில் ஊற்றவும்,அதில் வால் போல நீண்டு வந்தால் மாவு பதம் கெட்டியாக இருக்கிறது என்று அர்த்தம்.1 டேபிள்ஸ்பூன் அளவு நீர் ஊற்றி கரைக்கவும்.

*பூந்தி அமுங்கியது போல் வந்தால் மாவு பதம் நீர்க்க இருக்கிறது என்று அர்த்தம்.1 டீஸ்பூன் அளவு கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

*விரும்பினால் மாவு கரைக்கும் போது மிளகுத்தூளை சேர்த்துக் கொண்டு மிளகாய்த்தூளை தவிர்க்கலாம்.

Related Videos