நெல்லூர் கோங்கூரா பச்சடி | Nellore Gongura Pachadi

இந்த பச்சடி கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் மிக நல்ல சுவையாக இருக்கும்.

புளிச்ச கீரையில் இரு வகை உண்டு,இலையின் பின்புறத்தில் சிவப்பு நிறத்தோடு இருக்கும் கீரையில் புளிப்பு அதிகம் இருக்காது,அதற்கு புளி சேர்த்து அரைக்க வேண்டும்.சிவப்பு நிறத்தில் இல்லாமல் இருக்கும் கீரை அதிக புளிப்பு தன்மை கொண்டது அதற்கு புளி சேர்க்க தேவையில்லை.

தேவையான பொருட்கள்:

புளிச்ச கீரை -1 சிறிய கட்டு
காய்ந்த மிளகாய்- 6
தனியா- 3 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நல்லெண்ணெய்- தேவைக்கு

தாளிக்க‌:

கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை- 1 கொத்து
நசுக்கிய பூண்டுப்பல் -1/4 கப்

செய்முறை விளக்கம்:

*கீரையை சுத்தம் செய்து நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம் மற்றும் கடுகு இவற்றை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

*பின் கீரையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் வறுத்த மசாலாக்களை முதலில் பொடித்த பின் கீரையை உப்பு சேர்த்து நீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
*கடாயில் 1/3 கப் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த கீரையில் சேர்த்து கலக்கவும்.

Related Videos