முருங்கைக்கீரை கடையல் | DRUMSTICK LEAVES(MURUNGAIKEERAI) KADAIYAL
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த முருங்கைக்கீரை -2 கப்
துவரம்பருப்பு -1/3 கப்
பூண்டுப்பல்- 4
பச்சை மிளகாய்- 2
உப்பு+எண்ணெய் -தேவைக்கு
தாளிக்க:
வடகம் -1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
செய்முறை விளக்கம்:
*குக்கரில் துவரம்பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தேவையான நீர் சேர்த்து 2 விசில் வரை வேகவிடவும்.
*இப்போழுது பருப்பு முக்கால் பதம் வெந்து இருக்கும்.அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
*கீரையை சேர்த்து மூடி போடாமல் வேகவிடவும்.
*ஆறியதும் கீரையில் இருக்கும் நீரை வடித்துவிட்டு கீரை மட்டும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
பின் குறிப்பு:
*கீரை கலவை கெட்டியாக இருந்தால் சாதம் வடித்த நீரை சேர்த்து கலக்கி பரிமாறவும்.குளிர்ந்தநீரை சேர்க்கவேண்டாம்.
*கீரை வேகவைக்கும் போது மூடி போட்டு வேகவைக்கவேண்டாம்,கீரையின் நிரம் மாறிவிடும்.