கொள்ளு பொடி

இந்த கொள்ளு பொடி கொங்குநாட்டு ஸ்பெஷல்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கப்

சின்ன வெங்காயம் - 6 பொடியாக நறுக்கியது

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

பூண்டுப்பல் - 1

கடுகு - 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

சீரகம் - 1/2 டீஸ்பூன்

தனியா - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கொள்ளை சுத்தம் செய்து 4 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவிடவும்.

*பின் நீரை வடிகட்டி (அந்த நீரை கொள்ளு ரசத்திற்கு பயன்படுத்தலாம் )கொள்ளை நன்கு உலரவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தனியா மற்றும் சீரகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும், மிளகாய், கறிவேப்பிலைமற்றும்  பூண்டுப்பல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

*வதக்கிய பொருளுடன் உலர வைத்த கொள்ளு, மீதியுள்ள சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சின்ன இடிப்பானில் இடித்து எடுக்கவும்.

*இடிப்பான் இல்லையெனில் இவற்றை மிக்ஸியில் நீர்விடாமல் அரைத்தெடுக்கவும்.

 *சாததுடன் நெய் விட்டு இந்த பொடி சாப்பிட அருமை

Related Videos