ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல் மட்டன் பிரியாணி | Ambur Star Hotel Mutton Biryani

*தலப்பாக்கட்டு பிரியாணி போலவே இந்த பிரியாணியும் பிரபலமானது.

*இதில் காரத்திற்கு மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாய்க்கு பதில் காய்ந்த மிளகாயை அரைத்து சேர்க்கவேண்டும்.

*காய்ந்த மிளகாயின் நிறமே போதுமானதாக இருக்கும்,கலர் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்க தேவையில்லை.

*கறி சிறிது வெந்த பிறகுதான் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

*இஞ்சி பூண்டு விழுதினை தனித்தனியாக அரைத்து சேர்க்கவேண்டும்.

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

பாஸ்மதி - 4 கப்

நறுக்கிய வெங்காயம் - 2 பெரியது

நறுக்கிய தக்காளி - 2 பெரியது

புதினா+கொத்தமல்லித்தழை - தலா 1 கைப்பிடி

பூண்டு விழுது - 1  டேபிள்ஸ்பூன்

இஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்

தயிர் - 1/4 கப்

உப்பு - தேவைக்கு

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை -2

கிராம்பு - 2

ஏலக்காய் -2

பட்டை -1 துண்டு

ஊறவைத்து அரைக்க

காய்ந்த மிளகாய் = 8-10

செய்முறை விளக்கம்:

*காய்ந்த மிளகாயை நன்கு விழுதாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் இஞ்சி விழுதினை சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த காய்ந்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கிய பின் சுத்தம் செய்த கறியை போட்டு நன்கு வதக்கவும்.

*10 நிமிடங்கள் கழித்து புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

*பின் தக்காளி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கி தயிர் சேர்க்கவும்.

*பின் உப்பு மற்றும் 3 கப் நீர் சேர்த்து கறியை நன்கு வேகவிடவும்.

*இதற்கிடையே வேறொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அரிசியை போட்டு 3/4 பதத்தில் வேகவைத்து நீரை வடிகட்டவும்.

*கறிநன்கு வெந்த பின் வேகவைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

*தோசைகல்லை காயவைத்து அதன்மேல் பிரியாண பாத்திரத்தை வைத்து மூடி அதன்மேல் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய கஞ்சியை வைத்து தம்மில் 10 - 15 போடவும்.

*15 நிமிடங்கள் கழித்து மெதுவாக கிளறிவிட்டால் சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி

Related Videos