டேஸ்ட்டி சீஸ்-வெஜ் ப்ரெட் பஜ்ஜி செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 4
சீஸ் துருவல் - சின்ன பாக்கெட்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய கேரட்,கோஸ் - 1/4 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மேல் மாவுக்கு:
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சுத்தம் செய்த ஒமம் - 1/4 டீஸ்பூன்
மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி???
செய்முறை விளக்கம்:
* கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
*பின் கேரட்,கோஸ்+மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் போட்டு வதங்கியதும் குடமிளகாய்,மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி வைக்கவும்.
*மேல் மாவுக்கு கொடுத்துள்ளவைகலில் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,ஒவ்வொரு ப்ரெட்டையும் 4 முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளவும்.
*ஒரு முக்கோண ப்ரெட்டின் மேல் காய்கலவையை வைத்து அதன்மேல் சீஸ்துருவலை வைக்கவும்.பின் அதன்மேல் இன்னொரு முக்கோண ப்ரெட்டை வைத்து மூடவும்.இப்படியாக அனைத்து ப்ரெட்களையும் செய்யவும்.
*கடாயில் எண்ணெய் காயவைத்து ப்ரெட்டை (ஸ்டப்பிங் வெளியே வராதபடி) பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*இதனை கெட்சப்புடன் சாப்பிட சுவையோ சுவை!!.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Cheese Veg Bread Bajji Receipe in Tamil | Tasty & spicy Cheese Veg Bread Bajji in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil