கீரை சுண்டல் | keerai sundal

தேவையான பொருட்கள்: 

 ஏதாவது ஒரு கீரை - 1 கப்

பொடித்த ஒட்ஸ் - 1கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தேங்காய்த்துறுவல் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை :

*கீரையை சுத்தம் செய்து லேசாக வதக்கி பச்சை மிளகாய், உப்பு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* அதில் பொடித்த ஒட்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளைத் தாளித்து.தேங்காய்த் துறுவல் வேக வைத்த உருண்டையில் சேர்க்கவும்.

 பின் குறிப்பு:

*நான் சேர்த்திருப்பது முருங்கை கீரை.சுவை நன்றாக இருந்தது

Related Videos