முட்டை பரோட்டா | egg parotta
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
முட்டை - 3
பரோட்டா குருமா - 3 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பரோட்டா செய்முறையை இங்கே பார்க்கவும்.
*பரோட்டாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
*பின் முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.பரோட்டா சேர்த்து நன்கு கொத்தவும்.
*பரோட்டா குருமா சேர்க்கவும்.இல்லையெனில் தண்ணீர் தெளிக்கவும்.
*பரோட்டாவில் உப்பு இருப்பதால் பார்த்து போடவும்.
*நன்கு கொத்தியதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*விருப்பப்பட்டால் இதனுடன் கொத்துக்கறியும் சேர்க்கலாம்.காரமாக இருந்தால் எலுமிச்சைசாறு சேர்க்கவும்