ஆப்பம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
இளநீர் - 1
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அரிசி வகைகள்+உளுந்து மற்றும் ஜவ்வரிசி அனைத்தையும் 4 மணிநேரம் ஊறவைத்து இளநீர் மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
*அரைத்த மாவிலிருந்து 2 கரண்டி மாவெடுத்து 1 கப் நீர்விட்டு கரைத்து ராகி கூழ் போல காய்ச்சவும்.
*ஆறியதும் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.மாவு தோசைமாவு பதத்திற்க்கு இருக்கனும்.
*நான் ஸ்டிக் ஆப்பக் கடாயில் ஒரு குழிக்கரண்டி மாவு ஊற்றி ஆப்பசட்டியால் ஒரு சுற்று சுற்றி மூடி வேகவிடவும்.
*வெந்ததும் எடுக்கவும்.திருப்பி போடக்கூடாது.தேங்காய்ப் பாலுடன் பறிமாறவும்.
பின் குறிப்பு:
மாவை கூழ் போல் காய்ச்சி ஊற்றுவதால் ரொம்ப சாப்டா இருந்தது.சீக்கிரம் புளித்துவிட்டது.