கம்மங்கூழ் | Pearl Millet(Bajra) Koozh
தேவையான பொருட்கள்:
கம்பு - 1 கப்
தண்ணீர் -3 கப்
செய்முறை விளக்கம்:
*கம்பை சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 10 நிமிடம் வைக்கவும்.
*பின் மிக்ஸியில் பல்ஸ் மோடில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் கம்பு ஒன்றும் பாதியுமாக இருக்கும் மேலிருக்கும் உமியும் வந்துவிடும்.
*உமி நீங்க கழுவி குக்கரில் 3 கப் நீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் அதனை சாதம் போல காரசாரமான குழம்பு ஊற்றி சாப்பிடலாம்,நன்றாக இருக்கும்.
அல்லது கூழ் செய்து சாப்பிடவேண்டுமெனில்
*உருண்டைகளாக பிடித்து தண்ணீரில் போடவும்.தேவைக்கு ஏற்ப கூழ் கரைத்து குடிக்கலாம்.ஒவ்வொரு உருண்டையாக தினம் பயன்படுத்தும் போது நீரினை மாற்றவேண்டும்.
கூழ் செய்ய:
மோர்- 1 கப்
கம்புசோறு - 2 உருண்டைகள்
சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
*பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லித்தழை பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இதனுடன் உப்பு, மோர், 2 உருண்டை கம்புசோறு, சின்ன வெங்காயம் மற்றும்
மாங்காய் சேர்த்து கரைத்துக் குடிக்கவும்.
மாங்காய் சேர்த்து கரைத்துக் குடிக்கவும்.