பூண்டுக் குழம்பு | Garlic Kuzhambu
தேவையான பொருட்கள்:
புளி கரைசல் -2 கப்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 20
சின்ன வெங்காயம் - 10
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
சின்ன வெங்காயம் -5 (அ)பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தூள் வகைகள் மற்றும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
*பின் புளிகரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்