முருங்கைக்கீரை பொரியல் | Drumstick leaves poriyal

தேவையான பொருட்கள்: 

முருங்கைக்கீரை - 2 கப்

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

நசுக்கிய பூண்டுப்பல் - 2

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

 தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் கீரையை சேர்த்து நீர் சுண்டும் வரை கிளறவும்.

*பின் தேங்காய்த்துறுவல் மற்றும் நசுக்கிய பூண்டுப்பல் சேர்த்து கிளறி இறக்கவும்

Related Videos