முருங்கைக்காய் வடை

தேவையான பொருட்கள்: 

முருங்கைக்காய் விழுது - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டுப்பல் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 

செய்முறை விளக்கம்:

* கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சோம்பு, பூண்டுப்பல், கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


*இதனுடன் முருங்கைக்காய் விழுது, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து பிசையவும்.


*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி பிசைந்த மாவை வடைகளாக தட்டி டிரேயில் வைக்கவும்.

*ஒவ்வொரு வடையின் மீது 1 சொட்டு எண்ணெய் தடவவும்.

*270°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைத்து வேகவிட்டு,மறுபுறம் திருப்பி 1 சொட்டு எண்ணெய் விட்டு மீண்டும் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

Related Videos