ராகி கோதுமைரவை இட்லி | Ragi Wheat Rava Idli
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
கோதுமைரவை - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக 1 மணிநேரம் ஊறவைத்து நன்குஅரைத்தெடுக்கவும்.
*அதனுடன் கோதுமைமாவு, கேழ்வரகு மாவு மற்றும் உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து புளிக்கவைக்கவும்.
*புளித்ததும் இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.
பின் குறிப்பு:
*இதற்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.
*கோதுமைரவை பொடியாக இருந்தால் ஊறவைத்து அரைக்க தேவையில்லை