கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி | Pearl Millet(Bajra) Idli & Tindora(Ivy Gourd) chutney

கம்பு இட்லி 

தேவையான பொருட்கள்:

கம்பு - 1 1/2 கப்

இட்லி அரிசி/ புழுங்கலரிசி - 1/2 கப்

வெள்ளை முழு உளுந்து - 1/2 கப்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

 செய்முறை விளக்கம்:

 *அரிசி+கம்புஇவைகளை தனியாகவும்,உளுந்து,வெந்தயம் இவைகளை ஒன்றாகவும் ஊறவைக்கவும்.

 *கம்பை மட்டும் குறைந்தது 8 மணிநேரம் அல்லது முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

 *அரிசி மற்றும் உளுந்தை 4 மணிநேரம் ஊறினால் போதும்.

 *உளுந்து மற்றும் கம்பு இவைகளை நைசகவும்,அரிசியை கொரகொரப்பாகவும் அரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கரைத்து புளிக்கவிடவும்.

*புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.

பின் குறிப்பு:

*தோசையும் நன்கு முறுகலாக வரும்.

கோவைக்காய் சட்னி

தேவையான பொருட்கள்

நறுக்கிய கோவைக்காய் - 10/12 எண்ணிக்கை

நறுக்கிய வெங்காயம் - 1/2

நறுக்கிய தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 4

தேங்காய் துண்டுகள் - 2

புதினா,கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு – தேவைக்கு 

செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் உப்பு, தேங்காய் மற்றும் புதினா கொத்தமல்லி தவிர அனைத்தையும் சிறிது எண்ணெயில் வதக்கவும்.

ஆறியதும் உப்பு, தேங்காய் மற்றும் புதினா கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்.

 

*விரும்பினால் தாளித்துக் கொள்ளவும்.

 

Related Videos