தக்காளி ஊறுகாய் | Tomato Pickle

தேவையான பொருட்கள்: 

தக்காளி - 5 பெரியது

புளி - 1 நெல்லிக்காயளவு

வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக

கறிவேப்பிலை - சிறிது

கா.மிளகாய் - 2

நசுக்கிய பூண்டுப்பல் - 6

செய்முறை விளக்கம்:

*தக்காளியை நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.இதற்கு மட்டும் கொஞ்சம் பொறுமை வேணும்.தக்காளியிலிருந்து எண்ணெய் பிரிந்து வர 45 நிமிஷமாவது ஆகும்.

*அப்போதே அதனுடன் புளியையும் சேர்த்து மூடி அடுப்பிலிருந்து இறக்கி மூடிவிடவும்.ஆறியதும் தக்காளியை உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஒரு பவுலில் வைக்கவும்.

*அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் வெந்தயப்பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஆறவைத்து அரைத்த விழுதில் கலக்கவும்.

*ஆறவைத்து பிரிட்ஜில் தேவையானது பயன்படுத்தவும்.

பின் குறிப்பு:

தக்காளியின் புளிப்பிற்கேற்ப புளி சேர்க்கவும்.புளிப்புள்ள தக்காளியாக இருந்தால் நன்றாகயிருக்கும்

Related Videos