மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 பெரியது
கடுகு,வெந்தயம் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை விளக்கம்:
*மாங்காயை கொட்டை நீக்கி தேவையான அளவில் நறுக்கவும்.நறுக்கிய மாங்காயை ஒரு துணியால் ஈரம்போக துடைக்கவும்.
*பின் தேவையான உப்பை வெறும் கடாயில் வறுத்து மாங்காயில் கலந்து 1 நாள் வைத்திருக்கவும்.
*மிளகாய்த்தூள் மற்றும் கடுகு,வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து ஊறவைத்த மாங்காயில் சேர்க்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்
*ஆறியதும் பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.