இஞ்சி தொக்கு | Ginger Thokku
தேவையான பொருட்கள்:
தோல் சீவி துண்டுகளாகிய இஞ்சி - 1 கப்
கெட்டி புளிகரைசல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த இஞ்சியை போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை சேர்க்கவும்.
*எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும்.
*தயிர் சாதம்,பெசரெட் நல்ல காம்பினேஷன்.