நெல்லிக்காய் ஊறுகாய்| Amla Pickle

இதில் அதிகளவு விட்டமின் சி இருக்கு. 1 ஆம்லா = 2 ஆப்பிளுக்கு சமம்.இதில் எண்ணெய் குறைவாக சேர்ப்பதால் 2 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்: 

பெரிய நெல்லிக்காய் - 5

கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்

வறுத்து பொடித்த வெந்தயம்+கடுகு -தலா 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து,கொட்டைகளை நீக்கி சிறுதுண்டுகளாக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து துண்டுகளாகிய நெல்லிக்காயை போட்டு 2நிமிடங்கள் வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வரை கிளறி பொடித்த வெந்தயத்தூள் மற்றும் கடுகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

Related Videos