உருளைக்கிழங்கு பிரியாணி | Potato Biryani

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்

உருளைக்கிழங்கு - 2 பெரியது

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்

பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்

புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடியளவு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

 தாளிக்க:பட்டை - 1 துண்டு

கிராம்பு - 3

பிரியாணி இலை - 2

ஏலக்காய் -2

செய்முறை விளக்கம்:

*உருளைக்கிழங்கை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பிரியாணி மசாலா பொடி+புதினா கொத்தமல்லி இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

 *வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியைப் போட்டு வதக்கி 3 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

*ராய்த்தாவுடன் பரிமாறவும்.காய் இல்லையெனில் அவசரத்திற்க்கு இந்த பிரியாணியை செய்துவிடலாம்.

Related Videos