எலுமிச்சை சாதம் | Lemon Rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

எலுமிச்சை பழம் - 3

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிது

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் -வாசனைக்கு

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2

இஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது

 செய்முறை விளக்கம்:

*எலுமிச்சை பழத்தை பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைஅக்ளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.

பின்குறிப்பு:

1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.

2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.

3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.

4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

Related Videos