வெந்தயக்கீரை புலாவ் | Methi Pulao

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்

வெந்தயக்கீரை - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய தக்காளி - 1

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 2 கப்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

பூண்டுப்பல் - 4

இஞ்சி - சிறுதுண்டு

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 3

தாளிக்க:

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 3

பிரியாணி இலை - 2

ஏலக்காய் -2 

செய்முறை விளக்கம்:

*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.

*குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, அரைத்த விழுது, மஞ்சள்தூள், வெந்தயக்கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள், உப்பு, 1 கப் நீர் மற்றும் 2 கப் தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி அப்பளம் அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Related Videos