குஸ்கா | Khuska

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - 2கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய தக்காளி -1 சிறியது

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கீறிய பச்சை மிளகாய் -4

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தயிர் - 1/4 கப்

புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கிராம்பு -3

ஏலக்காய் -2

பிரியாணி இலை -2

சோம்பு -1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அரிசியை கழுவி நீரை வடிகட்டி சிறிது நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் பச்சை மிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் தயிர், புதினா சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தக்காளி சேர்த்து லேசாக கிளறி அரிசி, 3 கப் நீர், கொத்தமல்லிதழை, நெய் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்தெடுக்கவும்.

பின்குறிப்பு:

*தக்காளியை சேர்த்ததும் குழைய வதக்ககூடாது,சாதத்தின் கலர் மாறிவிடும்.

*பாதிக்கு பாதி தேங்காய்பாலும் சேர்க்கலாம்.

Related Videos