உளுந்து சாதம் | Urad dal Rice
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 1 கப்
உடைத்த கறுப்பு உளுந்து - 1/2 கப்
நீர் - 3 கப்
பூண்டுப்பல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அரிசி+உளுந்து இவ்விரண்டையும் கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*குக்கரில் ஊறவைத்த அரிசி, உளுந்து மற்றும் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து 3 விசில்வரை வேகவைத்து எடுக்கவும்.
*இதற்கு காரகுழம்பு அல்லது வத்தக்குழம்பு பெஸ்ட் காம்பினேஷன்.