தயிர் சாதம் | CurdRice
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பால் - 1/2 கப்
தயிர் -1/2 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*அரிசியை 2 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.
*பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து,வேகவைத்த சாதத்தில் சூட்டோடு பாலை ஊற்றி உப்பு சேர்த்து மசிக்கவும்.
*சாதம் ஆறியதும் தயிர்+கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து தாளித்து சேர்க்கவும்.
பின்குறிப்பு:
பொதுவாக தயிர் சாதத்தில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் மாங்காய் தான் சேர்ப்பேன்,மாதுளை முத்துகள் சேர்த்தால் சுவை மாறிவிடும் என்பதால் அவைகளை நான் சேர்ப்பதில்லை..