மோதகம்

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:
அரிசிமாவு - 2 கப்

உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்ய:
கடலைப்பருப்பு - 3/4 கப்
ஏலக்காய் - 2
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

செய்முறை விளக்கம்:

*ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் ஊற்றி  உப்பு மற்றும் எண்ணெய் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.

*பத்திரத்தில் அரிசிமாவு போட்டு கொதிக்கும் நீரை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும்.

*சப்பாத்தி மாவு பதத்திற்க்கு இருக்க வேண்டும். அதை ஈரத்துணியால் மூடிவைக்கவும்.மேல் மாவு ரெடி!!

*கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து மலர வேகவைக்கவும்.


*வெந்த பருப்பை நீர் இல்லாமல் வடிகட்டி ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும்.

*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடித்துக்கொள்ளவும்.

*ஏலக்காயை பொடிக்கவும்,தேங்காய்த்துறுவல்+மசித்த கடலைப்பருப்பு வெறும் கடாயில் வதக்கவும்.

*வெல்லத்தை 1 கம்பிபதம் அதாவது கையில் எடுத்தால் பிசுபிசுப்பாக இருக்கனும் எடுத்து ஏலக்காய் பொடி, கடலைப்பருப்பு மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.பூரணம் ரெடி.

*மேல்மாவில் சப்பாத்தி மாவு அளவுக்கு உருண்டை எடுத்து எண்ணெய் தொட்டு சொப்பு போல் செய்து பூரணத்தை அதில் வைத்து மாவை அப்படியே மேல் நோக்கி இழுத்து விடவும்.பார்ப்பதற்க்கு தேங்காய்ப் போல் இருக்கும்.
*இதே போல் எல்லா மாவையும் செய்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

Related Videos