கொள்ளு சாதம் | Kollu (Horsegram ) Rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 1 கப்

வேகவைத்த கொள்ளு - 1/2 கப்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது

கீறிய பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

வெந்தயம் +மிளகு  - தலா 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2  டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 *பின் வேகவைத்த கொள்ளு, உப்பு மற்றும் கொள்ளு வேகவைத்த நீர் 1/4 கப் குறைவாக சேர்த்து கொதிக்கவிடவும்.

*சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

பின்குறிப்பு:

சின்ன வெங்காயத்திற்கு பதில் நான் பெரிய வெங்காயம் சேர்த்து செய்திருக்கேன்.

Related Videos